Wednesday, 23 October 2013

"யாரப்பா நீ ??? இங்க என்ன பண்றதா உத்தேசம் ???"

ஏதோ ஒரு ஆர்வத்தில் நாமளும் ஒரு வலைப்பூ  தொடங்கிவிட்டோமே !!!  மக்கள் யாராவது எட்டி பாத்து  இருக்கங்களான்னு வந்து உலகின் பற்பல நாடுகளில் இருந்தும் அஞ்சு பேர்           ( !!!)பார்த்து  என்னை புல்லரிக்க வைச்சுட்டிங்களே....இனிமே நான் நிறைய பதிவுகளை போடுறதை யாராலும் தடுக்க முடியாது....
 சரி . இவ்ளோ பெருசா பில்ட் அப் கொடுக்கறியே.... அப்படி என்னதான் எழுதப்போறே என்று கேட்கும் வலையுலக மற்றும் பதிவுலக பெரியவங்களுக்கு....

  • சின்ன வயசுல இருந்து கண்டது கற்க பண்டிதன்  ஆவான்  என்று நினைச்சதாலே நிறைய படிச்சு... அதில எல்லாம் மனசிலே தைச்ச முக்கிய விஷயங்கள் நிறைய நோட் பண்ணி வைச்சு இருக்கனுங்க...
  • அது போல சில புத்தகங்கள் பற்றியும் , சில நல்ல திரைப்படங்கள் பற்றியும் எழுத எண்ணம் இருக்குங்க... 
  • அப்புறம் என்னை பாதித்த நிகழ்ச்சிகள் , மனிதர்கள் ,  இதை பத்தியும்  கொஞ்சம் எழுத எண்ணம்  உண்டுங்க....
  • அப்புறம் ... பதிவுலக மரபை மீறக்கூடாது என்பதற்காக அப்பப்போ மொக்கை கொஞ்சம் போடறதவும் ஐடியாங்க ...                                                   .அப்புறம்??? புக்மார்க் பண்ணிக்கங்க ... அப்பப்போ வாங்க ...நிச்சயம் புதுசா எதாவது எழுத முயற்சி பண்ணறேன். ஊக்கப்படுத்துங்க....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.அடிக்கடி வந்து, படித்து, பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துங்க...